September 26, 2017 தண்டோரா குழு
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மும்பையின் பாந்தரா பகுதியிலுள்ள தெருக்களை இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சிவ் சேனா இளைஞர் அணியின் தலைவர் ஆதித்யா தாக்கரே இணைந்து சுத்தம் செய்தனர்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவிலுள்ள பிரபலங்கள் பலர் இந்த திட்டத்தில் இணைந்து, சேவை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சிவ் சேனா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரே ஆகியோருடன் மும்பை நகரின் பாந்தரா பகுதியிலுள்ள தெருக்களை சுத்தம் செய்தனர்.
“மும்பை நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள, நம்முடைய ப்ரிஹான் மும்பை நகராட்சி துப்புறவு தொழிலாளர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்களுக்கு உதவியாக இன்று நானும் சச்சின் டெண்டுல்கரும் செயல்பாட்டோம்.”
“சுத்தம் செய்துகொண்டு வரும்போது, வெளியேற்றபடாத குப்பைகள், தெர்மாகோல், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை தான் மும்பை நகரை அசுத்தம் செய்ய காரணமாக இருக்கிறது என்று உணர்ந்துக்கொண்டோம். நமது நகரை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கையில் தான் இருக்கிறது. பந்த்ரா பகுதியை சுத்தம் செய்ய சச்சின் உதவியதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறான்” என்று ஆதித்யா தாக்கேரி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
“நமது தேசத்தை சுத்தமாக வைத்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் உதவி செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் அழைத்துக் கொள்ளுங்கள்; சுத்தம் செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்; நாம் ஒன்றாக இணைந்து நமது நாட்டை சுத்தம் செய்வோம்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.