September 26, 2017 தண்டோரா குழு
அண்டார்டிகாவில் பைன் தீவு பனிப்பாறையில் நடுப்பகுதி பிளவு ஏற்பட்டு, அது அண்டார்டிகாவில் பிரிந்து இருப்பதை செயற்கைக்கோள் மூலம் வெளியான புகைப்படம் உறுதி செய்துள்ளது.
உலகின் 5வது கண்டமாக அண்டார்டிகா விளங்குகிறது. அதிலிருக்கும் பைன் தீவு பனிக்கட்டி வட அண்டார்டிகா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பம் காரணமாக அங்கிருக்கும் பனிக்காட்டிகள் உருகி வருகிறது. இதனால், கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
கடந்த 2௦15ம் ஆண்டு, சுமார் 224 சதுர அடி அளவு உள்ள பனிக்கட்டிகள், தனியே பிரிந்து வந்தது. தற்போது வெளியாகியுள்ள செயற்கைக்கோள் மூலம் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சுமார் 1௦3 சதுர அடி பனிக்கட்டி பைன் தீவு பனிக்கட்டியிலிருந்து பிரிந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த பனிக்கட்டிகள் அமெரிக்க நாட்டின் மான்ஹாட்டன் நகரை விட நான்கு மடங்கு பெரியது. கடலில் வெதுவெதுப்பான தண்ணீர், பனிப்பாறையின் கீழ் பகுதியில் மோதுவதால், நிலையற்ற நிலை ஏற்படுகிறது. இதனால் தான், இந்த பிளவு ஏற்படுகிறது. பைன் தீவு பனிக்கட்டி மட்டும் சுமார் 1.7 அடி உயரம் தண்ணீர் அளவை அதிகரிக்கும் திறனுடையது. அதனால் தான் அந்த பனிக்கட்டியை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.