September 26, 2017
தண்டோரா குழு
மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்து புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விக்ரம் வேதா’.இப்படம் பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, இதன் இந்தி ரீமேக் உரிமத்தை நடிகர் ஷாருக்கான் பெற்றார்.
இந்நிலையில் உலக திரைப்பட விழாவிலே மிக பிரபலமாக பேசப்படும் டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது. ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும்.
மேலும், இவ்விழாவில் குறிப்பட்ட சில தமிழ் படங்கள் மட்டுமே இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.