September 26, 2017 தண்டோரா குழு
சிறுமிகள் பருவ வயதுக்கு அண்மித்தவர்கள் என்ற கருத்துப் பதியப்பட்டிருந்தது. ஒரு சிறுமியின் பருவ வயதை எப்படி அனுமானிப்பீர். குழந்தைகளின் பொதுவான வயது எல்லை. 7- 13 வரைக்குள்ளன குழந்தைகளே தெரிவாகின்றார்கள். மற்றும்படி குழந்தைகளைக் கோவிலுக்கு அனுப்புவதற்கான விருப்பம் அவர்களின் பெற்றோர் சார்ந்தது. அவர்கள் மட்டுமல்லாமல் கோவில் திருவிழாவில் பங்கெடுக்கும் அனைவரும் மேலாடை அணிவதில்லை. வயதில் மூத்த பெண்கள் சட்டை அணியாமல் மாரப்புப் போட்டுக் கொள்வார்கள்.
கிராமப் புறங்களில் சிறுமிகள் மேலாடை அணியாமல் இருப்பது பெரிய விடயமே இல்லை. யாரும் தவறாக எண்ணுவதுமில்லை. அவர்களை விரதம் என்ற பெயரில் கஸ்டப்படுத்துவது என்ற கருத்தும் தவறு. அவர்கள் பட்டினி போடப்படுவதில்லை. மூன்று வேளையும் உணவளிக்கப்படுகிறது.
தவிர குழந்தைகள் ஒன்றும் பிராய்லர் கோழியுமல்ல. அவர்கள் நடக்கின்றார்கள். வேண்டுதல்கள் செய்கின்றார்கள் என்பது எல்லாம் கூடவே அவளது சகோதரன் அல்லது தந்தை வருவார். சுமையான பொருட்களை அவர்களே தாங்கிப் பிடிப்பார். குழந்தைக்கு முடியாவிடின் அவர்களே தூக்கிக் செல்வார்கள்.
பள்ளிக்குச் செல்வதில்லை என்பது சனி ஞாயிறு கழித்துப் பார்த்தால் கூட 8 நாட்கள் தான். அதில் இந்த வாரம் லீவு அரசாங்கத்தால் விட்டிருக்கின்றனர். ஊர் பள்ளிகள் அவர்களின் இந்த வேண்டுதல் குறித்து கவனத்தில் கொண்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீர் செய்வார்கள்.
வெறுமனே ஒரு கிராமம் அல்ல நாங்கள். 60 கிராமங்களைச் சேர்ந்தது தான் வெள்ளளூர் நாடு. எங்களுக்குத் தனியாகப் பண்பாடு, கலாச்சாரம் உள்ளது. குற்றச்செயல்கள் இல்லாத மண் இது. குழந்தைகளைத் தவறாக நோக்கும் சிந்தனை எங்களின் மண்ணில் இல்லை. அதனால் எந்தக் குற்றங்களும் நடப்பதில்லை.
கேரளாவில் பகவதி ஆலயங்கள் பலவற்றில் பெண் குழந்தைகள் மேலாடை இன்றி வேட்டி கட்டி வழிபடும் பழக்கம் இருக்கின்றது. ஐயப்பன் ஆலயத்திலும் அந்த நடைமுறை இருக்கின்றது. திருவார்ப்பு விஸ்ணு ஆலயத்தில் 10 நாட்கள் குழந்தைகள் விஸ்ணு போல ஆடை அணிந்து வழிபடுகின்றனர். வடநாட்டு ஆலய்ங்களிலும்
இந்த நடைமுறை உள்ளது. அதில் எந்தத் தவறும் இல்லை.
காலம்காலமாகப் பின்பற்றப்படும் சம்பிர்தாயங்கள் என்பதால் தான் இவை தொடர்கின்றன. இதன் நீட்சி வரலாற்றுப் பழக்கவழக்கங்களின் தொன்மையை இது எடுத்துக்காட்டுகின்றது. ஆண்கள் கோவிலில் மேலாடை அணியாமல் இருப்பதும், ஐயர், சட்டையணியாமல் பூசை செய்வதும் எல்லாம் கட்டாயமா? இல்லையே தொன்மைக்கான அடையாளம் தானே இவை.
அரசர்களும் குறுமன்னர்களும் ஆண்ட காலத்தில் ஊர்த் தலைமை என்பது மாறிமாறி வரவேண்டும் என்பதற்காகத் தலைமைப் பதவியை நிரந்தரமாக ஒரு நபர் கையில் இல்லாமல் மாறிமாறி வரவைத்த பெருமை அக்காலத்திலே நடந்தது. ஏதோ கிராமத்தான் என்றால் மூடநம்பிக்கையைக் தூக்கிக் கொண்டு திரிபவன் என நினைக்க வேண்டாம்.
குழந்தைகள் விரதமிருக்கும் நாட்கள் அனைத்திலும் கூடவே அவர்களுக்கு உதவியாக யாரோ ஒரு உறவினர் இருப்பார்கள். அவர்களின் பாதுகாப்புக் குறித்தான அக்கறை பெற்றோருக்கும், உறவினருக்கும் நிறையவே உண்டு..
– சுரேஷ் வீராசாமி