September 27, 2017
tamilsamayam.com
இந்தியாவைச் சேர்ந்த 101 வயது வீராங்கனை மேன் கவுர் சீனா செல்ல விசா மறுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடைபெற்ற சர்வதேச 35 வயதிற்கு அதிகமானவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் கேம்ஸ் தொடரில், இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மேன் கவுர் பங்கேற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் கலந்துகொண்ட அவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், சீனாவில் நடைபெற இருக்கும் ஆசிய மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க மேன் கவுர் விசா பெற்ற விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு விசா அளிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்துவந்த நிலையில், விசா மறுப்பினால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார் அந்த 101 வயது வீராங்கனை.
இருப்பினும், நான் சோர்ந்துவிடவில்லை. அடுத்த போட்டிகளுக்கு தயாராகிறேன் என்றும் அவர் உற்சாகமாகத் தெரிவிக்கிறார்.