September 27, 2017 தண்டோரா குழு
ஈராக்கில் 2௦௦௦ ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈராக் நாட்டில் கிமு. 331-ம் ஆண்டு மாவீரன் அலெக்ஸ்சாண்டரால் ஆட்சி செய்யப்பட்ட கலட்கா டர்பாண்ட்(Qalatga Darband) என்னும் நகரத்தை ஈராக் மற்றும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சி குழு ஆராய்சியாளர்கள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் அதை கண்டுபிடித்து உள்ளனர்.
196௦ம் ஆண்டுகளில் சி.ஐ.ஏ செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படத்தில், அந்த நகரத்தின் இடிபாடுகள் தென்பட்டது அது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, ஆராய்சியாளர்கள் பல ஆண்டுகளாக பூமியில் புதைந்திருந்த அந்த நகரத்தின் கட்டடங்களை கண்டுபிடித்தனர். கிரேக்க நாணயங்கள் மற்றும் கிரேக்க ரோம கடவுள்களின் சிலைகள் ஆகியவை ஈராக்கின் குரிதிஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.