September 27, 2017
தண்டோரா குழு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,ஆனந்தி நடித்து வெளியான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.
இரட்டை அர்த்தங்கள் நிறைந்த இப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் ஓரளவு வெற்றியை பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்ற படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பினையும் ரகசியமாக நடித்தும் முடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷும் முதன் முதலாக இணைந்த ‘த்ரிஷா இல்லான நயன்தாரா’🎉வெற்றிப் படமாக அமைந்ததால் ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்ற டைட்டிலை மாற்றிவிட்டு ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா-2’ என்று டைட்டில் வைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.