• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்ரா கடன் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் ஒ எஸ் மனியன்

September 27, 2017

முத்ரா கடன் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு கடனுதவி வழங்கி நெசவாளர்களின் நலன் காக்கின்ற அரசாக தமிழக அரசு விளங்குகின்றது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சாய்பாபா கானியில் இன்று தமிழ்நாடு பஞ்சாலை கழக புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்திறப்பு விழா, மற்றும் கோவை, திருப்பூர் ரோடு மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் தெரிவித்ததாவது,

“தமிழ்நாடு அரசு நெசவாளர்களின் நலன் காக்கின்ற வகையில் சீரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையிலே தமிழகத்தில் 10ஆயிரம் நெசவாளர்களுக்கான பிரத்யோக பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட்லிருந்து 750 யூனிட் ஆகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாகவும் உயர்த்தி இலவச மினசாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் அலுவலகக்கட்டிடம் ரூ.21.00இலட்சத்தில் கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் 2500 சதுரடி பரப்பளவில் புதுபிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் சொந்தமாக 36 விசைத்தறிகளை கொண்ட தறிக்கூடமும், 10 நாடா இல்லா தறிகளைக் கொண்ட ஒரு தறிக்கூடமும் விருதுநகர் மாவட்டம் அறுப்புக்கோட்டையில் 96 தறிகளைக் கொண்ட ஒரு விசைத்தறிக்கூடமும் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 96 கைத்தறிகளைக் கொண்ட விசைத்தறிக்கூடமும் செயல்பட்டு வருகின்றது.

இந்த விசைத்தறிக்கூடங்களில் 150 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இக்கழகத்தின் மூலம் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான சீருடை துணிகளையும், அரசின் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் விலையில்லா சீருடைத் துணிகளை உற்பத்தி செய்தும் மற்றும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து அரசு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்திட வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 500 நெசவாளர்களுக்கு ரூ.2.50கோடி கடனுதவிகளை முத்ரா வழங்கி வருகின்றது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க