September 27, 2017
தண்டோரா குழு
பாலிவுட் படமான ‘குயின்’ படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது.
எனினும் பல நாட்களாக தள்ளிக் கொண்டே வந்த இந்த ரீமேக் விவகாரம், தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதன் படி, தற்போது இந்தியில் கங்கனா ரணாவத் கேரக்டரில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்துக்கு,‘பாரிஸ் பாரிஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.அதேபோல் இப்படம் தெலுங்கிலும் ரிமேக் ஆகவுள்ளது. இதில் கங்கனா ரணாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்தப் படத்தை, நீலகந்தா ரெட்டி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.