September 28, 2017
சென்னையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழா அக்டோபர் 1ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவாஜி ரசிகர்கள், திரைத்துறையில் சகாப்தமாக விளங்கிய புகழ்மிக்க நடிகரை முதலமைச்சர் அவமதிப்பதாக கூறியுள்ளனர். இதனால் சிவாஜியின் குடும்பத்தாரும் தமிழக அரசு மீது வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு ஒரு கடிதத்தை எழுதி தமிழக அரசிற்கு அனுப்பியுள்ளார்.
அதில் அவர்”ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சிவாஜியின் மணிமண்டப விழாவிற்கு தலைமை ஏற்று நடத்தி இருப்பார்”என்று கூறியுள்ளார்.மேலும், தமது திரைப்படங்கள் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிவாஜி உதவியுள்ளதாக குறிப்பிட்ட பிரபு, மணிமண்டப விழாவை மிகச் சிறியதாக நடத்துவது அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இல்லை என்றும் கூறியுள்ளார். எனவே மணிமண்டம் திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் ஆவண செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.