September 28, 2017
தண்டோரா குழு
பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய பின்பு நடிகை ஓவியாவிற்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதனால் ஓவியாவிற்கு சினிமா வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், தற்போது ஓவியா நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. ஆம்! நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் காஞ்சனா 3 படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
தற்போது ஓவியா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.