• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய ஆளுநருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வைக்கும் கோரிக்கை !

September 30, 2017 தண்டோரா குழு

தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநனர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது மேகாலயா ஆளுநராக இருந்து வருகிறார்.தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தமிழத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

ஸ்டாலின் (திமுக):

தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். “234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கிறது”, என்று தேர்தல் ஆணையத்தில், முதலமைச்சரின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கின்ற இந்தநேரத்தில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புகிறேன்.

அன்புமணி இராமதாஸ்(பாமக):

புதிய ஆளுனருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மராட்டிய மாநில அமைச்சர், ஆளுனர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர். அந்த அனுபவங்களின் உதவியுடன் தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்.தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு பெரும்பான்மை இழந்த நாள் முதல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் அனைத்தையும் புதிய ஆளுனர் ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தமிழக அரசு எந்த கொள்கை முடிவுகளையும் எடுக்காமல் காபந்து அரசாக மட்டுமே செயல்படும்படி முதல்வருக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக)

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திற்கு கடந்த ஓராண்டாக முழுநேர ஆளுநரை நியமிக்காமல் பொறுப்பு ஆளுநரை வைத்து தமிழக அரசியல் நெருக்கடிக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை பின்நோக்கி செல்லும் சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கியது. தற்போது தமிழகத்திற்கென்று ஒரு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். புதிய ஆளுநர் நியமனம் என்பது காலம் தாழ்ந்த முடிவு என்றாலும், ஒரு முழுநேர ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்பது தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.

டிகேஎஸ்.இளங்கோவன்திமுக எம்.பி :

சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்குவதே ஆளுநரின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து புதிதாக பொறுபேற்றுள்ள ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்)

தமிழகத்தின் நீண்ட போராட்டத்திற்க்கு பிறகு ஒரு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்க்கதக்கது. புதிய ஆளுநர் பல்வேறு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். தமிழக அரசுக்கு தற்போது மக்களின் ஆதரவும் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவும் இல்லை. விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க