October 2, 2017 தண்டோரா குழு
கோவையில் புறாகலைஞர்கள் நடத்திய புறா பறக்க விடும் போட்டி நடைபெற்றது.இதில் கோவையில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் பங்கேற்றன.
கோவை ஆவாரம்பாளையத்தில் வருடத்திற்கு ஒரு முறை புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெறும். இதில் கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான இந்தபோட்டியில் பங்கேற்ப்பார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் 245 புறாகலைஞர்கள் தங்களது புறாக்களுடன் பங்கேற்றார்கள்.இப்போட்டியில் கர்ண புறா,சிவப்பு கண் புறா என இரு வகையான புறாக்கள் பங்கேற்றன.
இந்த புறாக்கள் எவ்வளவு தூரம் பறக்கின்றன. அதுமட்டுமல்லாமல் எத்தனை முறை பல்டி அடிக்கின்றன என்பது குறித்து கணக்கிட்டு பரிசு வழங்கப்படும்.
இது குறித்து புறாக்கலைஞர்கள் தெரிவிக்கையில்,புறாக்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடக்கும் இப்போட்டியைக் அடுத்த ஆண்டு முதல் மாநில அளவில் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.