October 2, 2017 தண்டோரா குழு
அருணாச்சல பிரதேஷ் எல்லையை ஒட்டியுள்ள லாசா மற்றும் நியின்சி நகரங்களை இணைக்க சீனா புதிய நெடுஞ்சாலையை திறந்துள்ளது.
சீனாவின் திபெத் மாகணத்தின் தலைநகரான லாசாவை இந்தியாவின் அருணாச்சல் பிரதேஷ் எல்லைக்கு அருகிலிருக்கும் நியின்சி நகருடன் இணைக்க சுமார் 409 கிலோமீட்டர் கொண்ட ‘எக்ஸ்பிரஸ் வே’ என்னும் சாலையை சீனா திறந்துள்ளது.
பொதுவாக லாசா மற்றும்நியின்சி நகருக்கு செல்ல வேண்டுமானால், சுமார் எட்டு மணிநேரம் பயணிக்க வேண்டும். ஆனால் தற்போது திறந்திருக்கும் இந்த புதிய சாலை மூலம் சுமார் 5 மணிநேரத்தில் சென்று அடைய முடியும். இந்த சாலையை கட்ட சுமார் 5.8 பில்லியன் டாலர் செலவானது.
திபெத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் வே சாலை மூலம் சீன ராணுவத்திற்கு தேவையான பொருட்களை வேகமாக கொண்டு செல்ல முடியும். இந்த புதிய சாலையில் கனரக வாகங்கள் செல்ல தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.