October 2, 2017 தண்டோரா குழு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக 23.01.2017 அன்று நடைபெற்ற போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலமையில் விசாரணை ஆனையம் அமைக்கப்பட்டது.
இந்த போராட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் விபரம் அறிந்தவர்கள் 30.04.2017 வரை பிராமணப்பத்திரங்கள் தாக்கல் செய்யலாம் என்று தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளில் வெளியிடப்பட்டது.இதனைத்தொடர்ந்து 1949 பிராமணப்பத்திரங்கள் விசாரணை ஆனையத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும்,பிராமணப்பத்திரங்கள் தாக்கல் செய்த சென்னையைச் சேர்ந்த நபர்களுக்கு அழைப்பானைகள் அனுப்பப்பட்டு கடந்த ஜூன் 7ம் தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது.கோவையில் முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 16,17,மற்றும் 18 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
மதுரையில் பிராமணப்பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களை விசாரிக்கும் பொருட்டு மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் 04.10.2017 முதல் 06.10.2017 வரை மூன்று நாட்கள் விசாரனை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.பிராமணப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ள நபர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பானைகள் அனுப்பப்பட்டுள்ளன .