October 3, 2017 தண்டோரா குழு
தமிழக அரசின் இரட்டை வரிவிதிப்பை ரத்து செய்யக்கோரி, மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி குறைக்கப்பட்டு 10% ஆக நிர்ணையிக்கப்பட்டு உள்ளது.தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் கேளிக்கை வரி குறைக்கப்பட்டாலும், ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட கேளிக்கை வரியை அமல்படுத்தியதால் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும்,பிற மொழி திரைப்படங்களை வெளியிடும் மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகள் பெருமளவில் பாதிப்படையும் என்பதால்,இந்திய மல்ட்டிப்ளக்ஸ் அசோசியேஷன் கீழ் இயங்கும் பிவிஆர், ஐநாக்ஸ் திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.