October 3, 2017
tamilsamayam.com
ஐசிசி அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டம் விராத் கோலி, முதலிடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா இரண்டு 4 இடங்கள் முன்னேறி 5வது இடத்திலும், டோனி 12வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், பும்ரா 5வது இடத்திலும், அக்ஷர் பட்டேல் 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.