• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா இதுவரை கண்டிராத வித்தியாசமான சரும நோயால் பீடிக்கப்பட்ட குழந்தை.

June 14, 2016 தண்டோரா குழு

ஹார்லிகுவின் என்ற சரும நோய் தாக்கப்பட்ட பெண் குழந்தை நாக்பூர் பெண்மணிக்கு குறைப் பிரசவத்தில் சனிக்கிழமை லதா மங்கேஷ்வர் மெடிக்கல் காலேஜ் மருத்துமனையில் பிறந்தது.

இந்த விதமான குறைபாடு 300000 த்தில் ஒருவர்க்கே வரும்.குழந்தையின் உடல் தடித்த தோலால் மூடியிருக்கும்,.ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படும். இந்தக் குழந்தையின் எடை1.28 கிலோ.மூக்கிற்குப் பதிலாக இரண்டு ஓட்டைகள்.தலை கீழான இமைகள்,காதுகள் கிடையாது, கண்களுக்குப் பதிலாக 2 சிவப்பு வீங்கிய புடைத்த பகுதி.

உடம்பின் உள்பாகங்கள் வெளியே தெரியுமளவிற்கு பல இடங்களில் தோலே இல்லாத நிலை. அதனால் தொற்று நோய் விரைவில் பரவ வாய்ப்புகள் அதிகம்..மற்றும் மீன் போன்ற வாய்.

இந்தக் குழந்தையின் பெற்றோர் தொலைதூரம் தள்ளி கிராமத்தின் கோடியில் வசிக்கும் ஏழைகள்.கற்ப காலத்தின் போது எந்தப் பரிசோதனையும் இந்தப் பெண்மணி செய்து கொள்ளவில்லை.அவ்வாறு செய்திருக்கும் பட்சத்தில் மருத்துவர்களிடமிருந்து சிசுவின் நிலையைப் பற்றி தெரிந்து கொண்டிருந்தால் 4 மாதத்திற்குள் கலைத்திருக்கலாம். என்பது டாக்டர்களின் கருத்து.

டாக்டர்.யாஷ் பானெய்ட்,பிராச்சி டிக்ஸ்ட்,மீனாஷி,மற்றும் டாக்டர்.நிலோஃவார் முஜாவர் ஆகிய ஒரு மருத்துவர் குழுவே இப் பெண்மணியின் பிரசவத்தைக் கவனித்தது. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை எடுக்கப்பட்டது.

மருத்துவர்கள் இவ்விஷயத்தைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. கிராம மக்கள் இதைப் பேய் குழந்தை எனப் பிரசாரம் செய்துவிடுவர் என்ற காரணத்தினால்.

இந்தக் குழந்தையை மிகுந்த கண்காணிப்பில் வளர்த்தவேண்டும்.எப்பொழுதும் தொற்று நோய்த் தடுப்பு மருந்துகளையும் ,தோலின் ஈரப்பசை குன்றாதவண்ணம் களிம்புகளையும் தவறாது கொடுத்தவண்ணம் இருக்கவேண்டும் . ABCA12 மரபணு பிறழ்ச்சியால் ஏற்பட்டது இந்தக் குறைபாடு,. என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன் 1984 ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒரு குழந்தை இதே போன்ற குறைபாட்டுடன் பிறந்தது. 24 வருடம் உயிருடன் வாழ்ந்தது.ஆயினும் அதற்குத் தோல் இறுதி வரை வளரவே இல்லை என்று குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க