October 3, 2017 தண்டோரா குழு
MH370 போயிங் விமானத்தை கண்டுபிடிக்க ஆஸ்திரேலிய விமான அதிகாரிகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த 2014ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்ல 239 பயணிகளுடன் MH370 போயிங் விமானம் புறப்பட்டது. தென் கிழக்கு சீன கடலின் மேல்பகுதியில் பறந்துக்கொண்டிருந்தபோது, கடைசியாக விமான போக்குவரத்து கட்டுபாட்டு அறையுடன் தகவல் பரிமாற்றப்பட்டது. அதன்பிறகு அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில்,அந்த விமானத்தை கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள் உதவி செய்ய முன் வந்தது. சுமார் 1,046 நாட்கள் தேடியும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனையடுத்து “Deep Sea Sonar” என்ற கருவி மூலம் அந்த விமானம் தேடப்பட்டது. அந்த விமானத்தின் எந்த ஒரு அடையாளமோ அல்லது அதன் பாகமோ கிடைக்கவில்லை. இதனால்,கடந்த ஜனவரி மாதம் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் விமானங்களில் பயணம் செய்கின்றனர். அப்படி இருக்கையில், அந்த விமானம் காணாமல் போய், பல நாட்கள் ஆகியும், அது குறித்தோ அல்லது அதில் பயணித்த பயணிகள் குறித்தோ எந்த தகவலும் கிடைக்காமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. அந்த விமானத்தின் முக்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தான், அந்த விபத்திற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.