October 3, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் டாம் பெட்டி காலமானார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலிபு நகரில் பிரபல பாப் பாடகர் டாம் பெட்டி(66) வசித்து வந்தார். அவருக்கு நேற்று(அக்டோபர் 2) மாரடைப்பு ஏற்பட்டது. அவரை யூசிஎல்ஏ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.
‘தி டிரவேல்லிங் வில்ஸ்பரி’ என்னும் இசை குழுவின் துணை நிறுவனரான அவர் பாடகர், பாடலாசிரியர், பல்வேறு இசை கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட பன்முக கலைஞர் ஆவார்.
கடந்த 1976ம் ஆண்டு ‘டாம் பெட்டி அண்ட் தி ஹார்ட்ப்றேகேர்ஸ்’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டார். அந்த ஆல்பம் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. அதன் பிறகு, அவர் தனியாகவும் பல இசை ஆல்பங்களை வெளியிட்டார். அவருடைய பாடல்கள் இளைய தலைமுறையினர் இடையே மிகவும் பிரபலமானது.
அவர் பாடிய சிறந்த ராக் பாடல்களான ‘அமெரிக்கன் கேர்ள்’ ‘டோன்ட் டூ மீ லைக் தட்’ ‘ப்ரீ பால்லிங்’ ‘மேரி ஜென் லாஸ்ட் டான்ஸ்’ ‘ஐ வோன்ட் பேக் டவுன்’ ஆகிய பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்தது.18 முறை கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மூன்று முறை கிராமி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாம் பெட்டியின் மறைவு அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்லாமல் இசை துறைக்கே பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.