October 4, 2017
tamilsamayam.com
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அவர் விஜய்யின் 62 படத்தை ஜனவரியில் தொடங்கவுள்ளார்.
இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ‘‘விரைவில் விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இருவரிடமும் சம்மதம் பெற்றுவிட்டதாகவும்’’ கூறினார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு ஹீரோவும், விஜய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் விஜய் ஹீரோவாகவும்,, மகேஷ்பாபு வில்லனாகவும் நடிக்கவுள்ளனர்.
இவர்கள் இருவரும் இணையும் இந்தப் படம் தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.