October 4, 2017 தண்டோரா குழு
சுமார் 1௦௦௦ ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை 37.7 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.
சீனா நாட்டின் ஹாங் காங் நகரின், கிபி 96௦ முதல் 1127 வரை ஆட்சி செய்த சாங் மன்னர்கள் காலத்தின்போது, தயாரிக்கப்பட்ட கோப்பை ஒன்றை ஹாங் காங் நகரிலுள்ள கில் சோத்பீ நிறுவனம் ஏலம் விட்டது.இந்த ஏலம் சுமார் 1௦.2 மில்லியன் டாலரில் இருந்து தொடங்கியது. சுமார் 2௦ நிமிடம் நடந்த அந்த ஏலத்தின்போது, அந்த கோப்பை சுமார் 37.7 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.
இந்த கோப்பை 13 சென்டிமீட்டர் வட்டமும் நீல நிற தோற்றமும் கொண்டது. சீன நாடு பீங்கானால் செய்யப்பட்ட பாத்திரங்களுக்கு பெயர் போனவை. பல பீங்கான் பாத்திரங்கள் ஹாங்காங்கிலிருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோப்பையை வாங்கினது யார் என்ற விவரத்தை தெரிவிக்க ஏல நிறுவனம் மறுத்துவிட்டது.
கடந்த 2014ம் ஆண்டு, மிங் மன்னர் ஆட்சி காலத்தை சேர்ந்த கோப்பை அதிகபட்சமாக 36.5 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.