October 6, 2017
தண்டோரா குழு
தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் மாரி-2 படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கடையில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழு அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது, அது என்னவென்றால் இந்த படத்தின் முக்கியமான இரண்டாவது கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்க உள்ளாராம்.
இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.