October 9, 2017
தண்டோரா குழு
தல அஜித் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.இடையில் அவருடைய மகன் பிறந்த பின்பு, தன் வீட்டில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் கடந்த சில நாட்களாக அவர் வாடகை வீட்டிற்கு குடியேறினார்.
இந்நிலையில் தற்போது அந்த வீடு கலக்கலாக தயாராகிவிட்டதாம், இதனால் மீண்டும் சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.
தல அஜீத் தன் வீட்டு கதவு முதல் கிச்சன் வரை எல்லாவற்றையும் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் மாற்றியுள்ளாராம். மேலும், தன் மகளுக்காக பரதநாட்டியம் பயில தனி இடம், ஷாலினி பேட்மிட்டன் விளையாட தனி கோர்ட் என வீட்டிற்குள் பல வசதிகளை செய்து கொடுத்துள்ளாராம்.