October 11, 2017
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மெர்சல்’.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான இப்படத்தை அந்நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு என ஒரு நட்சத்திர கூட்டமே இப்படத்தில் நடித்துள்ளது.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் தனது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணியில் உள்ளது.
‘மெர்சல்’ படத்தை வரும் அக்டோபர் 18-ம் தேதி வெளியீடுவதில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது.இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 3292 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும்வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.