October 13, 2017
tamilsamayam.com
ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பார் ஐஸ்வர்யா தற்போது ஒரு பேட்டியில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
விவேகம் படம் சக்கை போடு போட்ட பின்பு, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அனைவரது மனதில் இருக்கும் ஒரே கேள்வி, அவரின் 58வது படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது தான்.
ஒவ்வொருவரும் தங்கள் மனக்கண்ணிற்கு எட்டிய வரையில் ஒவ்வொரு இயக்குனராக கற்பனை செய்தனர். ஆனால், அவற்றையெல்லாம் அலேக்காக தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது உறுதியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பார் ஐஸ்வர்யா தற்போது ஒரு பேட்டியில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இயக்குனர் சிவா தான் அஜித்தின் 58 வது படத்தின் இயக்குனர் என்றும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.