October 14, 2017 தண்டோரா குழு
தியேட்டர் கட்டணம் தொடர்பாக எங்களுக்கு கட்டளையிட நடிகர் விஷால் யார்?என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கெட் விற்கவேண்டும், பார்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது, அம்மா குடிநீர் தான் பயன்படுத்த வேண்டும் என அண்மையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்,
திரையங்கு கட்டணத்தை உயர்த்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி. தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண முறையில் குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் என இருப்பதால், இடத்திற்கு ஏற்ப கட்டண முறையை நெகிழ்வுத் தன்மையுடன் நிர்ணயிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம், சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்த கட்டணமும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்க முடியும் என்றார்.
மேலும், சினிமா டிக்கெட் கட்டண விவகாரத்தில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட விஷால் யார்? எனவும் அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.