October 16, 2017
tamilsamayam.com
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் களமிறங்கவுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, 3 ஒருநாள், 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கிம்பர்ளியில் நாளை நடக்கிறது.
இதில் நீண்ட இடைவேளைக்கு பின், மிஸ்டர் 360 டிகிரி வீரர் டிவிலியர்ஸ் பங்கேற்கவுள்ளார். காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த டிவிலியர்ஸ், கடைசியாக இங்கிலாந்தில் கடந்த ஜீன் மாதம் நடந்த ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.
இதன் பின் கடந்த 12ம் தேதியில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க லெவன் அணிக்காக மீண்டும் களமிறங்கிய டிவிலியர்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் நாளைய போட்டியில் டிவிலியர்ஸ் பங்கேற்பதால், அவரது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இதே போல வங்கதேச அணியிலும் நம்பர்-1 ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், காயத்தில் இருந்து மீண்டும் களமிறங்கவுள்ளார்.