October 16, 2017 தண்டோரா குழு
மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட மெர்சல் படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்தது. எனினும் ‘மெர்சல்’ படம் தற்போது தொடர்ந்து வேதனைகளை அனுபவித்து வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம்
ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது படமாகும்.
ஆரம்பத்தில் படத்திற்கு எதிராக உருவான அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்த தயாரிப்பு தரப்பினால், தற்போது விலங்குகள் நலவாரியத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை. இதனால் படம் வெளியாவதே கேள்விக்குரியானது.
இந்நிலையில், ’மெர்சல்’ படத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ஆலோசிக்க, விலங்குகள் நலவாரியத்தின் சிறப்பு அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த அவசர கூட்டத்தில் மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.மேலும், படத்தில் புறா வரும் காட்சி குறித்து சர்ச்சை ஏற்பட்டதால் தடையில்லா சான்று வழங்கபடாமல் இருந்தது. இதையடுத்து இன்று நடந்த அவசர கூட்டத்தில் தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாவது உறுதியானது.