June 17, 2016 தண்டோரா குழு
மத்திய கிழக்கு நாட்டின் சிறையில் இருக்கும் ஆந்திரா மற்றும் அதன் அண்டை மாநிலமான தெலங்கானா பெண்களைக் காப்பாற்றும்படி ஆந்திர மாநிலத்தின் வெளிநாடுவாழ் இந்திய நல அமைச்சர் ரகுநாத ரெட்டி, வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் உதவியை நாடி உள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் பெண்கள் தங்களுடைய கொடுமையான எசமானியிடம் இருந்து தப்பி சென்றதற்காகவும் அங்கு வேலைக்காகச் சென்ற சிலர் தங்களுடைய வேலையின் விசா முடிந்த பிறகும் அங்கேயே இருத்தக் குற்றத்திற்காகவும் சிறையில் உள்ளனர்.
ஆந்திரா மாநிலம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் இருந்து பெண்கள் கடை பொருள் போல் விற்கப்படுகின்றனர் என்று சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ரகுநாத் ரெட்டி குறிப்பிட்டு இருந்தார். மேலும் இலவசமான பயணம் மற்றும் தேவையான விசா ஆவணங்கள் வழங்கி அவர்களை அங்கு இருந்து பத்திரமாக மீண்டும் அவர்களுடைய சொந்த இடத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி அங்கு உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான உடை, ஆகாரம் மற்றும் தங்கும் இடம் தந்து துயரத்தில் உள்ள அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று ரெட்டி கேட்டுக்கொண்டார்.
இந்திய பெண்கள் சவுதி அரேபிய நாட்டிற்கு சுமார் 4,00,000 ரூபாய்க்கு விற்கப் படுகின்றனர். பகரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுமார் 1,00,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி உள்ள பெண்களை காப்பாற்ற இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், இந்தக் கடிதம் ஒரு நினைவூட்டல் போல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடுகளில் குடியேறி உள்ள மக்களில் எத்தனைப் பேர் அவ்வாறு சிக்கி தவிக்கின்றனர் என்று சொல்ல அதிகரபுர்வமான தகவல்கள் இல்லை.
ஆனால் நிபுணர்கள் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு இருப்பதாகவும் அதில் பலர் சிறையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
பல பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய மூன்று மடங்கு பணம் செலுத்தி தங்களுடைய கிராமங்களை விட்டு வெளிநாடுகளுக்குப் பல கனவுகளுடன் செல்கின்றனர். ஆனால் துருதவஷ்டமாக ஆட்சேர்ப்பு முகவர்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்பது பரிதாபத்திற்குரிய விஷயமாகும்.
கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் இதைக் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஆறு வளைகுடா நாடுகள் தூதரக பணியை மேற்கொண்ட போது உடல் துஷ்பிரயோகம், கொடுமை, சரியாகச் சம்பளம் தராமல் இருப்பது மற்றும் மற்ற குறைகளை குறித்த புகார்கள் பதிவு செய்யப்பட்டது என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.