October 17, 2017
tamil.samayam.com
மெர்சல் படத்துக்காக நடிகர் விஜய் உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கி மூன்று வேடத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. சமந்தா, காஜல், நித்யா மேனன் 3 நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களையும் தாண்டி மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்துக்காக உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.