October 17, 2017 தண்டோரா குழு
போபாலில், பிளாஸ்டிக் கவரில் சுற்றி குப்பை தொட்டியில் வீசப்பட்டு, எறும்புகள் மொய்த்த வண்ணம் இருந்த பெண் குழந்தையை டீக்கடை வியாபாரி ஒருவர் மீட்டுள்ளார்.
மத்திய பிரதேஷ் மாநிலத்தின் போபால் நகரை சேர்ந்தவர் தீரஜ் ரத்தூர். இவர் அப்பகுதியில் டீ கடை நடித்தி வருகிறார்.இந்நிலையில்,நேற்று டீக்கடை அருகே இருந்த குப்பை தொட்டியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தீரஜ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பிறந்த பெண் குழந்தை ஒன்று, பிளாஸ்டிக் கவரில் சுற்றி அங்கு போடப்படிருப்பதையும், அந்த குழந்தையை எறும்புகள் மொய்த்த வண்ணம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே தனது நண்பர்களின் உதவியுடன் அந்த குழந்தையின் உடலில் இருந்த எறும்புகளை அகற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அந்த குழந்தையை தூக்கி சென்றுள்ளார். அந்த குழந்தையை கண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் “அந்த குழந்தையின் நிலை கவலைகிடமாக இருக்கிறது. பொதுவாக பிறந்த குழந்தையின் உடல் எடை 2.5 கிலோ முதல் 3.9 வரை இடையே இருக்க வேண்டும். ஆனால, இந்த குழந்தையின் உடல் எடை 1.5 கிலோ தான் இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்ற நிலை இருப்பதாகவும் வரதட்சணைக்கு பயந்து பெற்றோர்கள் பெண் குழந்தைகளை அதிகமாக வெறுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.