October 19, 2017 தண்டோரா குழு
கோவையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அன்னூரை சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் அடுத்த செல்லனூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது 6 வயது மகள் விஸ்மிதா. இவர் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் கோவை மாவட்டம் முழுவதும் 49 பேர் உயிரிழந்துள்ளதும் தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 142 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் அதில் 41 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 49 பேர் டெங்குவால் உயிரிழந்த நிலையில் உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி டெங்கு பாதிப்பால் கோவையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.