October 20, 2017
tamil.samayam.com
எதிரணி பவுலர்களுக்கு மெர்சல் அரசான திகழ்ந்த முன்னாள் அதிரடி மன்னன் சேவக்கின் 39வது பிறந்தநாள் இன்று. இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக். இவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எதிரணியில் எப்படிப்பட்ட சிறந்த பவுலராக இருந்தாலும், முதல் பந்தில் கொஞ்சம் கூட பயப்படாமல் சிக்சருக்கு அனுப்பும் தனி ‘தில்’ கொண்டவர் சேவக்.
தவிர, மிகவும் மந்தமான டெஸ்ட் போட்டிகளையும் ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் அளவுக்கு டெஸ்ட் போட்டியின் போக்கையே தனி ஆளாக மாற்றியவர். டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை டிரிபிள் செஞ்சுரி அடித்த ஒரே இந்திய வீரர் சேவக்.