October 20, 2017 தண்டோரா குழு
மெர்சல் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க கோருவது கருத்துரிமைக்கு எதிரானது என மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் கூறியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது வருகிறது. இதற்கிடையில், மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டைவை தொடர்பான காட்சிகளுக்கு தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்து அந்த காட்சியை நீக்கவேண்டும் என கூறியுள்ளார். அதைபோல் மெர்சல் படத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில், மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,விஜயின் மெர்சல் திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. காட்சிகளை நீக்கவேண்டும் எனில் தணிக்கைகுழுவிடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,கருத்துரிமை அடிப்படையிலேயே வசங்கங்கள் உள்ளன. ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை எனவும் மெர்சல் படத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என கூறுவது சரியல்ல எனவும் கூறினார்.