October 21, 2017 தண்டோரா குழு
மெர்சல் படத்துக்கு பஜாகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தீபாவளியன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு இழப்பு மற்றும் மத்திய அரசை குறித்து சில காட்சிகள் வசனத்துடன் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த காட்சிகளை நீக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார். அதில்,‘‘மெர்சல் படம் தணிக்கை சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது.எனவே அதனை மறுதணிக்கை செய்ய வேண்டாம். விமர்சனங்களை தர்க்கரீதியான முறையில் எதிர்கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.மாறாக,விமர்சிப்போரை மவுனமாக்கக் கூடாது. கருத்துகளை வெளிப்படையாக பேசும்போது தான் இந்தியா மிளிரும்’’
இவ்வாறு டிவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.