October 21, 2017 தண்டோரா குழு
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவற்றை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர்கள் அந்த காட்சியை நீக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனினும் திரையிலகை சேர்ந்த பலர் விஜய்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து, உடனே ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
அதாவது, உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு இலங்கையில் எம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டபோது எங்கே போனீர்கள் ராகுல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டுள்ளார்.
சமீப நாட்களாக மெர்சல் பட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.