October 23, 2017
tamilsamayam.com
டென்மார்க்கின் ஓடென்ஸில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் தென் கொரியாவின் லீ ஹெய்ன் இல் மோதினர்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-10 எனவும் 2வது செட்டை 21-5 என்ற புள்ளிக்கணக்கிலும் கைப்பற்றினார்.
21-10, 21-5 என நேர்செட் கணக்கில், கிடம்பி ஸ்ரீகாந்த் வெறும் 25 நிமிடங்களில் லீ ஹெய்னை வென்று சாதனைப் படைத்தார். பிரிமியர் பேட்மிண்டன் ஓபன் சீரிஸில் கிடம்பி ஸ்ரீகாந்த் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும்.
போட்டி முடிந்த பிறகு, இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரும் இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான, புல்லீலா கோபிசந்த் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில், “இது எளிதான வெற்றியாக தெரியலாம். ஆனால், லீ மிகவும் நுட்பமான வீரர். அவர் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர்.
ஆனால், ஸ்ரீகாந்த் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் போட்டியாளரின் பலவீனத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல் செட் முடிவில், விட்டுக்கொடுக்காமல் போட்டியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன்” என்று தெரிவித்தார்.