October 24, 2017
tamil.samayam.com
சுந்தர்.சி இயக்கி வரும் கலகலப்பு இரண்டாவது பாகத்தின் படபிடிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது.
கலகலப்பு 2 படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி முதல்கட்டமாக காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக அங்கு படபிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காசியில் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நிறைவடையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘கலகலப்பு 2’-இல் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
2012-ஆம் ஆண்டு சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.