October 24, 2017
tamil.samayam.com
போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்பட்டது.
போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாட புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான இவர் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
லண்டன் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற FIFA Best விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான இரண்டாவது இடத்தை அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சியும் மூன்றாவது இடத்தை பிரேசிலின் நெய்மரும் பெற்றனர்.
FIFA அளிக்கும் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5வது முறையாக பெற்றிருக்கும் ரொனால்டோ, மெஸ்சியின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.