October 24, 2017
tamil.samayam.com
காளி, அலாவுதினும் அற்புத விளக்கும் போன்ற பிரம்மாண்ட படங்களை வழங்கி கமல் ஹாசன், ரஜினி போன்ற நடிகர்களை இயக்கிய மாபெரும் இயக்குனர் ஐ.வி. சசி இன்று உடல் நலம் பாதிப்பால் சென்னையில் காலமானார்.
இவரது மரணம் திரைப்பட உலகில் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. நடிகர் கமல் மட்டும் ரஜினியை இயக்கியவர் சசி. காளி, அலாவுதினும் அற்புத விளக்கும் , குரு போன்ற படங்களை இயக்கி தனது திறமைக்கு தனி முத்திரை பதித்தவர்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சீமாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.கேரளாவில் 1948 ல் சசி பிறந்தார். இவருக்கு வயது 69.