October 24, 2017
தண்டோரா குழு
மலையாள சினிமாவின் மிக பெரிய இயக்குனரும்,நடிகை சீமாவின் கணவருமான இயக்குனர் ஐ.வி.சசி உடல் நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு,காளி போன்ற படங்களை இயக்கியவர் ஐ.வி.சசி.இவருடைய மரணம் மலையாள திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரையுலக நட்சத்திரங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில்,கமலஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,”நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்” என்று தெரிவித்துள்ளார்.