October 25, 2017
tamilsamayam.com
புனே ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் பட்டைய கிளப்ப, நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ஆட்டம் கண்டது. இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநால் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று நடக்கிறது.
அக்ஷர் வாய்ப்பு:
இதில் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
சொதப்பல் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11), முன்ரோ (10), வில்லியம்சன் (3) வழக்கம் போல சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த சாதனை ஜோடியான ராஸ் டெய்லர் (21), லதாம் (38) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.
நழுவிய ‘ஹாட்ரிக்’:
நிகோலஸ் (42) புவனேஸ்வர் வேகத்தில் போல்லாடானார். தொடர்ந்து சகால் சுழலில் கிராண்ட்ஹோமே (41), மில்னே (0) ஆகியோர் அடுத்ததடுத்த பந்தில் வெளியேறினர். தொடர்ந்து வந்த சவுத்தி அடுத்த பந்தை தடுத்து ஆட சகாலின் ஹாட்ரிக் வாய்ப்பு பரிபோனது.
கடைசி நேரத்தில் சாண்ட்னர் (29), சவுத்தி (25*) ஆகியோர் ஓரளவு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.