October 25, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் புதிய பாதுகாப்பு முறை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் தங்கள் மடிக்கணினியை எடுத்து செல்கின்றனரா என்று தீவிரமாக பரிசோதக்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஜூன் மாதம், பாதுகாப்பு கருதி மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காஆகிய நாடுகளில் உள்ள 10 விமான நிலையங்களில் இருந்து, அமெரிக்க நாட்டிற்கு வரும் விமானங்களில் மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை ஜூலை மாதம் நீக்கப்பட்டது.
தற்போது அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய நடவடிக்கையால், 105 நாடுகளில்இருக்கும், 280 விமானநிலையங்களில் இருக்கும் 180 விமானநிறுவனங்களின் சேவைபாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.