October 26, 2017 தண்டோரா குழு
‘அண்ணா’ என்ற தமிழ் வார்த்தை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் பல்வேறு மொழிகளில் இருக்கும் வார்த்தைகளை அவ்வப்போது சேர்க்கப்படுவது வழக்கம்.அதன்படி, தற்போது மூத்த சகோதரரை ‘அண்ணா’என்று அழைக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் உருது மொழியில் அப்பாவை குறிக்கும் ‘ABBA’என்னும் வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆச்சரியமான ஒன்றை குறிக்க பயன்படுத்தும் ‘அச்சா’ என்னும் இந்தி வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு பாப்பு, படா தின், பச்சா, மற்றும் சூர்ய நமஸ்கார் ஆகிய வார்த்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தெலுங்கு, உருது, தமிழ், இந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் இருந்து மொத்தம் 70 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஆங்கில எடிட்டர் டானிகா சலாசர் கூறுகையில், ” ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 4 புதுப்பிப்புகளை வெளியிடுகிறது. இந்த புதுப்பிப்பின் போது, இந்தி ஆங்கில மொழியில் 70 வார்த்தைகள் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அகராதியில் சுமார் 900 இந்திய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது”என்று கூறினார்.