October 26, 2017 தண்டோரா குழு
அமெரிக்கா அனுப்பிய 75 தீவிரவாதிகள் பட்டியலில் ஹபீஸ் சயீத் பெயர் இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 2008ம் ஆண்டு, மும்பை நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உட்பட இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதலை, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு, காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை நிறுவனர் மற்றும் ஜமாத்-உத்-தாவஹ் தலைவர் ஹபீஸ் சயீத் ஆவார். கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரிலுள்ள ஜமாத்-உத்-தாவஹ் அலுவலகத்தை பாகிஸ்தான் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, அவரையும் அவருடைய 4 கூட்டாளிகளையும் கைது செய்து, வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு, அமெரிக்காவிடம் இருந்த தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் குடிமகனான ஹபீஸ் சயீத் பெயர் இருந்தது. அந்த தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பியது.
ஆனால், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில், அமெரிக்கா பாகிஸ்தான் 75 தீவிரவாதிகள் பட்டியலை அனுப்பியதாகவும், அதில் ஹபீஸ் சயீத் பெயர் இல்லை.ஆப்கானிஸ்தான் தலிபானுக்கு கடந்த காலத்தில் உதவி செய்ததுபோல்,தற்போது அந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் எந்த வித ஆதரவையும் அளிக்கவில்லை.வேறு யாரோ அவர்களுக்கு இப்போது நிதியுதவி அளித்து வருகிறார்கள்” என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்தார்.