October 27, 2017
tamilsamayam.com
இனி சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாடப்போவதில்லை என்று பிரபல பாடகி ஜானகி அறிவித்தநிலையில், அவருடைய இறுதி இசை நிகழ்ச்சி நாளை மைசூரில் நடைபெறவுள்ளது.
வரும் 28-ந்தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்றும் ஓய்வு எடுக்க போவதாகவும் எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மைசூரில் உள்ள ஒரு அறக்கட்டளையின் சார்பில் ஜானிகியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சியாளர்கள் தரப்பில் கூறும் போது, ஜானகி ஒய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்றும் இருந்தபோதிலும், நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தன் பேரில், இந்த இசை நிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவி்த்தாகவும் தொடர்ந்து பேசிய அவர்கள், இது தான ஜானகியின் கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இதன் பின்னர், ஏற்கனவே அவர் கூறியது போல ஒய்வு பெறுவார் என்றும் தெரிவித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சியில், நடிகர்கள் சிவராஜ் குமார், பி சரோஜா தேவி, இசையமைப்பாளரகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.