October 28, 2017
தண்டோரா குழு
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் சரஸ்வதி பூஜைக்கே வெளியாக இருந்தது.
இந்நிலையில் சில காரணங்களால் டிசம்பர் 22ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் தான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படமும் வருவதாகவுள்ளது.இதற்கிடையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘குப்பத்து ராஜா’ படமும் அதே தினத்தில் வெளிவர போவதாக கூறப்படுகிறது.
இதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதையடுத்து அதிக திரையரங்குகளில் செய்யலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் இப்படங்களால் வசூல் பாதிக்கும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.