October 30, 2017 தண்டோரா குழு
உத்தர பிரதேஷ் மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், கர்ப்பிணி பெண்ணிற்கு சாலையில் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேஷ் மாநிலத்தின் மதுராவிற்கு அருகில் சோனே என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சோனா கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல சரியான போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால், அந்த பெண்ணின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்புக்கொண்டு, நிலையை எடுத்து கூறினார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அந்த பெண்ணை இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து சென்றனர். இதற்கிடையில், அந்த பெண்ணிற்கு அதிக வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர், அந்த கர்ப்பிணி பெண்ணை சாலையின் ஒரு இடத்தில் படுக்க வைத்து பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின், அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை துணியில் சுற்றி பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து பிறந்த குழந்தையையும் அதன் தாயையும் அருகிலிருந்த உள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.