November 1, 2017
tamilsamayam.com
பிரிஸ்பேனின் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெண்கள் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் பைனலுக்கு இந்தியாவின் ஹீனா சிந்து தகுதி பெற்றார்.
இதன் பைனலில் சிந்து 240.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகளான எலினா (238.2 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், கிறிஸ்டி கில்மான் (213.7) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
முன்னதாக டெல்லியில் நடந்த உலககோப்பை துப்பாக்கி சுடுதலில் சிந்து, ஜீத்து ராய் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.